உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு ஸ்மித்தினுடைய ஆரம்ப விமரிசகர்கள் பொதுவாக அவருடைய முறைகளையும் கருத்துக்களையும் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே அவருடைய செல்வாக்கு – குறிப்பாக ரிக்கார்டோவுடன் இணைந்து – பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுக்கள் வரையிலும் மிகவும் அதிகமாக இருந்தது. அதற்குப் பிறகு நிலைமை மாறியது. ஒரு பக்கத்தில் மார்க்சியம் தோன்றியது. மறு பக்கத்தில் எழுபதுக்களில் அரசியல் பொருளாதாரத் துறையில் அகநிலை மரபு தோன்றி வெகு சீக்கிரத்தில் முதலாளித்துவ விஞ்ஞானத்தில் மேலாதிக்கம் பெற்றது. ஸ்மித்தைப் பற்றி “கடுங்கண்டிப்பான” அணுகுமுறை […]